சமத்துவம் - சமநீதி - சமுதாய நீதி

சென்னை, செப். 12- சென்னை - மியூசிக் அகாடமி அரங்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னின்று நடத்திய, கலைஞர் புகழ் வணக்கம்! நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய டாக்டர் பிரியா இராமச் சந்திரன், சமத்துவம் - சமநீதி - சமுதாய நீதி எனும் கோட்பாடுகளைச் சட்டமாக்கியவர் கலைஞர் அவர்கள்! தமிழ் இருக்கின்ற காலம் வரை கலைஞர் பெயரும் நின்று நிலைக்கும்! என்று குறிப்பிட்டார். மேலும் அவர் தனது உரையில், சரித்திர நாயகர் கலைஞரின் சுயசரிதை; இந்த மண்ணின் வரலாறாக மாறிவிட்டது! என்று புகழாரம் சூட்டினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் பிரியா இராமச்சந்திரன் பேசியதாவது :- கலைஞரின் இளம் சூரியன் இன்று உதயசூரியனாக முழுவடிவம் பெற்று இந்த திராவிட அரங்கில் சுடரொளி வீசு வதைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு 14 வயது இருக்கும் போது, நான் கலைஞர் எனும் ஆளுமையின் முன் மேடையில் பேசினேன். அவரது அந்தரங் கம், என்னை வாழ்த்தியதாக உணர்ந் தேன். அந்த உணர்வுடன் இன்று இந்த மேடையில் பேசுகிறேன். ஆனால், நான் கலைஞரைப் பற்றி பேசப் போவதில்லை. ஒரு சொல்லைப் பற்றி பேசப் போகிறேன். அறிஞர்கள் சுட்டும் சொல்லின் வலிமை! ஒரு சொல் எத்தகைய வலிமை வாய்ந்தது! ``சொல்லுக்கும், கடிய வேகச் சுடுசரம் என்கிறான் கம்பன். சொல்லை இராமனின் அம்புக்கு ஒப்பிடுகிறான் அந்தப் புலவன். தாமஸ் கார்லாயில் என்ற ஸ்காட்லாந்து நாட்டு அறிஞர் கூறினார், சொல்லின் வலிமையால் ஒருவன் தலைவனாகலாம் என்று. அவனுக்கு போர் வலிமை தேவையில்லை; தோள் வலிமை தேவையில்லை; சொல்லின் வலிமையால் ஒருவன் தலைவன் ஆகலாம் என்கிறான். இது சாத்தியமா? என்று சிந்தித்துப் பார்த்தேன். உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தேன். மார்க் ஆண்டனி, ரோமாபுரியைச் சேர்ந்த நாவலர். சொல்லின் செல்வர். அந்த நாட்டு அரசன் ஜூலியஸ் சீசர் மாண்டபோது பேசினார். குசநைனேள! சரஅயளே! உடிரவேசலஅந டநனே அந லடிரச நயசள. ழுசநயவ ஊநயளநச கநடட, டீ றுயவ ய கயடட றயள வாயவ ஆல உடிரவேசலஅந! குடிச லடிர யனே யனே யடட டிக ரள கநடட னடிற ரோம் நாட்டு மக்களே! உங்கள் செவிகளைக் கொடுங்கள்! சீசர் வீழ்ந்து விட்டார்கள். நீங்களும், நானும் நாட்டு மக்கள் அனைவரும் வீழ்ந்து விட்டோம் என்று பேசினார். இந்தச் சொற்பொழிவு அந்த நாட்டு மக்களுக்கு இடையே ஒரு புரட்சியை ஏற் படுத்தியது - ஒரு விழுச்சியை ஏற்படுத்தி யது. இந்தச் சொற்பொழிவு மார்க் ஆண்ட னியை ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதிக்கு தலைவன் ஆக்கியது. ஆனால், அந்த தலைமை நீடிக்கவில்லை. ஏன் தெரியுமா? சொல் வலிமை மட்டும் போதாது! அதனைச் செயலாக மாற்றும் திறன் வேண்டும்.! அது மார்க் ஆண்ட னியிடம் இல்லை. அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில், இங்கி லாந்து நாட்டின் பிரதமர். இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து நாடு மாபெரும் தோல்வியுறும் நிலையில் இருந்தது. இந்தச் சொல்லின் செல்வர் பேசினார்... ஏஉவடிசல யவ யடட உடிளவள. ஏஉவடிசல ளேயீவைந டிக வநசசடிச. ஏஉவடிசல டி அயவவநச டிற டடிபே யனே யசன வாந சடியன அயல நெ. க்ஷநஉயரளந றவைடிரவ எஉவடிசல வாநசந ளை டி ளரசஎஎயட எல்லா வகையிலும் வெற்றி! அச்சுறுத் தலையும் மீறி வெற்றி! வெற்றியின் பாதை மிக நீண்டதாக இருக்கலாம். ஆனால், வெற்றி இல்லா விட்டால் உயிர்வாழ்வு இல்லை. இந்தச் சொற்கள் நலிந்த நாட்டை நிமிரச் செய்தது. தனது செயல் திறனால் சர்ச்சில் இங்கிலாந்து நாட்டை போரில் வெற்றி பெறச் செய்தார். ஆனால், அதற்குப் பிறகு வந்த தேர்தலில் சர்ச்சில் தோல்வியுற்றார். இதற்கு என்ன காரணம்? சொல் வலிமையும், செயல் திறனும் மட்டும் போதாது. அந்த செயலை சாதனை ஆக்க வேண்டும். செயல் எப்பொழுது சாதனையாகும்?. அந்தச் செயலின் அடிப்படைக் கோட்பாடுகள் பெரும்பான்மையோரின் உள்ளத்தில் எதிரொலிக்கும் போது அது சாதனை யாகும். இந்த ஆற்றல் சர்ச்சிலிடம் இல்லை. அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லிங்கன்! அடுத்து ஆப்ரகாம் லிங்கன். அமெரிக்க நாட்டு ஜனாதிபதி. அடிமைத் தனத்தை ஒழிக்க முற் பட்டார்.. குடிரச ளஉடிசந யனே ளநஎந லநயசள யபடி டிரச கயவாநசள செடிரபாவ கடிசவா டி வாளை உடிவேநேவே ய யேவடி உடிஉநைஎநன டநெசவல யனே னநனஉயவநன வடி வாந யீசடியீடிளவைடி வாயவ யடட அந யசந உசநயவநன நளூஎயட ஹடட அந யசந உசநயவநன நளூஎயட என்ற சொற்களை தன் செயல் திறனால் சட்ட மாக்கினார். அது சாத னையாக நாடெங்கும் எதிரொலித்தது. ஆனால், அதுவும் போதவில்லை. அந்தச் சாதனை சரித்திரமாக வேண்டும். சாதனை எப்போது சரித்திரம் ஆகும். அது நிரந்தரத் துவம் பெற்றால் சரித்திரம் ஆகும்? தனது சாதனையை சரித்திரம் ஆக்க காலம் அனுமதிக்க வில்லை. ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பிறகு வந்தவர்கள் அதை செய்து முடித் தார்கள். எனது தேடலில் சொல்லைச் செயலாக்கி, செயலை சாதனை ஆக்கி, சாதனையால் சரித்திரம் படைத்த, ஒருவரை, இந்தத் தமிழ் மண்ணில் கண்டேன். திராவிட இயக்கத்தின் குடையின் கீழ் அறிஞர் அண்ணாவின் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்த வர் கலைஞர். அறிஞர் அண்ணா வின் இரங்கல் அஞ்சலியில் பேசினார்; இரவலாக உன் இதயத்தை என்னிடம் தந்திடு அண்ணா! நான் வரும் பொழுது அதை கையோடு கொண்டு வந்து உன் கால்களில் வைப்பேன் என்றார். கலைஞரின் சாதனைகள் சரித்திரமாயின! இந்த சொற்களின் தடங்காணா ஆழம், அவரை ஆட்சியின் சிகரத்திற்கு எடுத்துச் சென்றது. ஆட்சியில் அமர்ந்த வர் தனது ஆட்சியை, சாமான்யர்களின் சகாப்தம் என்றார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார். வானவில் வண்ணம் படைத்த சமுதாயத் தில் அனைவரையும் என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே! என்று அழைத்தார். கட்டி அணைத்தார். சமத்துவம், சமநீதி, சமுதாய நீதி என்ற கோட்பாட்டினைத் தாங்கிய அவரது சொற்களை செயல் திறனால் சட்டமாக்கி னார். அது நாடெங்கும் சாதனையாக எதிரொலித்தது. பிறகு நிரந்தரத்துவம் பெற்று சரித்திரமாக மாறியது. சொல், செயல், சாதனை, சரித்திரம் இவை அனைத்தும் இவரது 60 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் நிகழ்ந்தது. அந்தச் சரித்திரம் அளிக்கும் சுதந்திரத் தைத் தான் இன்று நீங்களும் - நானும் அனுபவிக்கிறோம். கலைஞர் தந்த சுதந்திரம் ஆணுக்கு பெண் சமம்! சுதந்திரம் என்று நான் எதைச் சொல்கிறேன் என்றால் 1947 ஆம் ஆண்டு இந்திய நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால், இன்றும் இந்த நாட்டின் பல மாநிலங்களில் தனியுரிமை இல்லை. பெண்ணாகப் பிறந்த நான், நள்ளிர வில் அஞ்சாமல் சாலையில் நடந்து செல் கிறேன். நான் பணியாற்றும் மருத்துவ மனைக்குச் செல்கிறேன். அங்கு காவலர் கள் இருக்கிறார்கள்! என்ற தைரியம் இல்லை எனக்கு! இந்தத் தமிழ் மண்ணில் நான் ஒரு ஆணுக்கு சமமானவள் என்ற சிந்தனைதான் என் நெஞ்சில். இது இவர் சொற்கள் தந்த தனியுரிமை! இவர் சொற்கள் தந்த சுதந்திரம். முதன் முதலில் கம்பன் கழக விழாவிற்குச் சென்றேன், 2015ஆம் ஆண்டு. அனைத்து சாதியைச் சேர்ந்த வர்கள் ஒருங்கிணைந்து தமிழ் அமுதம் பருகுவதைக் கண்டேன். வியந்து போனேன். இந்தக் காட்சியை இந்தியா வில் மற்ற மாநிலங்களில் பார்க்க முடியுமா? இது இவர் சொற்கள் தந்த தனியுரிமை! இவர் சொற்கள் தந்த சுதந்திரம். சமரசம் என்ற நீரைப் பாய்ச்சினார்; ஜனநாயகப் பூஞ்சோலை மலர்ந்தது! சமுதாயம் பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டார் கலைஞர். இந்தப் பிளவுகளை எப்படி மாற்றுவது என்று சிந்தித்தார். பூமி பிளந்தால் பூகம்பம் கிளம்பும். அந்தப் பிளவு களில் நீரைப் பாய்ச்சினால் அந்தப் பிளவுகள் ஆறுகளாக மாறும். ஆறுகள் பாலைவனத்தைச் சோலைகளாக ஆக்கும். எனவே, சமுதாயத்தில் ஏற்பட்ட பிளவுகளில் சமரசம், என்ற நீரைப் பாய்ச்சினார். ஜனநாயகப் பூஞ்சோலை மலர்ந்தது. கலைஞரின் வாழ்க்கையிலிருந்து சமரசம் கற்போம்! சமரசம் என்ற ஒரு சொல்லை நாம் கலைஞரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்தச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் சரியான விளக்கம் இல்லை. சிலர் மனதிலும் சரியான விளக்கம் இல்லை. இது வருந்த வேண்டிய விடயம். ஆனால் இந்தச் சொல்லின் பொருளை உணர்ந்தவர் கலைஞர்! இந்தச் சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கலைஞர். இந்தச் சொற்களை நாம் உணர்ந்தோமேயானால், நமது சராசரி வாழ்க்கையிலும் பூஞ்சோலை மலரும். கலைஞரின் சுயசரிதை இந்த மண்ணின் வரலாறு! இன்று இந்தச் சரித்திர நாயகனின் சுயசரிதை இந்த மண்ணின் வரலாறாக மாறி விட்டது. இது மிகவும் முக்கியமான செய்தி. கலைஞரின் சுயசரிதை இன்று இந்த மண்ணின் வரலாறாய் மாறி விட்டது. கூந ழளைவடிசல டிக யேவடி, ஐள வாந டிபசயயீல டிக பசநயவ அந - இது தாமஸ் கார்னய் சொன்னது. இந்தச் சரித்திர நாயகனைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமா? வருந்தாதீர்கள். மெரீனா கடற்கரைக்குச் சென்று பாருங்கள். அங்கு எழும் ஓசை களை காதோர்த்து கேட்டுப் பாருங்கள். அதில் அவரது புரட்சிக் கவிதையின் சந்தம் இருக்கும். காதல் கவிதையின் யாழ் ஒலியும் இருக்கும். ஒவ்வொரு அலையும் தமிழ், தமிழ் என்று முழங்கும்! அந்த இயற்கையிடம் இருந்து இந்தத் தமிழைப் பிரிக்க நினைத்தார்கள். அது நடக்கவில்லை. தமிழ்க்காற்றும், தமிழ் மண்ணும், தமிழ் அலையும், இந்தத் தமிழ் மகனை வா! வா! என்று தன் கருவறைக்கே அழைத்துச் சென்றது. இன்று தமிழ்த்தாயின் அரவணைப்பில் அங்கு வீற்றிருக்கிறார் கலைஞர்! எனவே, என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே வருந்தாதீர்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்றால், அங்கு செல்லுங்கள். இந்த மண் இருக்கும் வரை! இந்த மொழி இருக்கும் வரை! அறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் இருக்கும் வரை. இவரும் அங்கு தான் இருப்பார். இவ்வாறு டாக்டர் பிரியா ராமச்சந் திரன் உரையாற்றினார்.