ஜம்மு காஷ்மீர்:

குப்வாரா, செப்.12- ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப் பட்டனர். குப்வாரா மாவட் டத்தின் ஹந்வாராவுக்கு அருகே உள்ள குளூரா பகுதிகள் பாதுகாப்பு படை யினரை குறி வைத்து பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படை சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கர வாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாது காப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு 220 பயங்கரவாதிகளும், இந்த ஆண்டு இதுவரை 142 பயங்கரவாதிகள் என கடந்த 2 ஆண்டுகளில் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ் ராய் பட்னாகர் நேற்று தெரிவித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.