ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள்

சென்னை, செப்.12- எடப்பாடி பழனிச்சாமி அமைச் சரவையில் இடம் பெற்றுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்றும், இது தொடர்பாக எஸ்.பி. வேலுமணியுடன் ஒரே மேடை யில் விவாதிக்கத் தயார் என்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. பேட்டி அளித்துள்ளார். தன் மீதான ஊழல் புகார் களில் இருந்து தப்பிப்பதற்காக தவறான தகவல்களை உள்ளாட் சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து வருவ தாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சென்னை அறி வாலயத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ். பாரதி எம்.பி., உள்ளாட்சித் துறை ஒப்பந்தங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்களை முறைகேடாக பினாமிகளுக்கு வழங்கி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி யின் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்கக் கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ள தாகத் தெரிவித் தார். ஆனால், குற்றச்சாட்டு களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக் கில் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி பேசி வருவ தாக ஆர்.எஸ். பாரதி எம்.பி. குற் றம் சாட்டினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யின் ஊழல் களுக்கு போதுமான ஆதா ரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நகராட்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச் சராகப் பொறுப்பு வகிக்கும் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஊழல், முறைகேடு, வருவாய் க்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு கண் காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மற்றும் கண்கா ணிப்பு ஆணை யத்துக்கு கழக அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நீண்ட கடி தம் ஒன்றை நேற்று முன்தினம் கொடுத் திருந்தார். இது தொடர் பாக கழகத் தலை வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட் டிருந்தார். எந்தெந்த வகையில் அமைச் சர் எஸ்.பி. வேலுமணி முறை கேட்டில் ஈடுபட்டு வருகிறார். யார் யாரெல்லாம் பினாமிகளாக இருந்து செயல்படுபவர்களுக்கு, நடைமுறைகளை, விதிமுறை களை மீறி ஒப்பந்தம் தருகிறார் - அதுவும் அனுபவமே இல்லா மல் உறவினர் என்பதற்காகவே அவர்களுக்கு ஒப்பந்தம் அளித்து கமிஷன் பெறுகிறார் என்பதை மிக விளக்கமாக குறிப்பிட்டு அந்தக் கடிதத்தில் விரிவான விளக்கங்களுடன் உரிய ஆதாரங்களுடன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் கள் தெரிவித்திருந்தார். சென்னை மாநகராட்சியில் மட்டும் நிதி நிலைமை உபரியாக இருந்து இன்றைக்கு பற்றாக் குறை என்கிற அளவிற்கு மாற எஸ்.பி. வேலுமணிதான் கார ணம் என்பதை விளக்கி - குறிப் பாக மத்திய அரசின் `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டும் எப்படி எல்லாம் அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பதையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவரமாக தெரிவித் திருந்தார். இதற்கு மறுப்பு என்கிற பெயரில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டியளித்தார். அவருக்குப் பதிலளித்து கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு- அமைச்சர் எஸ்.பி.வேலு மணி மீது நேற்றைய தினம் (10.09.2018) திராவிட முன் னேற்றக் கழகம் சார்பில் அவரு டைய பதவி காலத்தில் நடை பெற்ற முறைகேடுகள், டெண்டர் ஊழல் ஆகியவற்றையெல்லாம் விரிவாக, ஊழல் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அவர்களிடம் நேரடி யாக சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆணைக்கு ஏற்ப மனு கொடுத்து விட்டு வந்தேன். அவருடைய இலாக்காவில் நடைபெற்ற ஊழலைப் பற்றி ஊடகங்களிலே வந்தபோதும், பத்திரிகைகளிலே வெளி வந்த போதும் சம்பந்தப்பட்ட பத்தி ரிக்கை ஊடக நண்பர்களை யெல்லாம் மிரட்டிய செய்தி எல்லாம் உங்களிலேயே பல பேருக்கு நன்றாகத் தெரியும்! திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தமட்டிலும் நாங்கள் கொடுக்கின்ற புகார் கள் ஏனோ தானோ என்று இருக் காது. ஆதாரத்தோடுதான் புகார் அளிப்போம். அவர் மீது சுமத்தப் பட்டிருக்கிற அத்தனை குற்றச் சாட்டுகளையும் ஒரே மேடை யிலே நான் விவாதிக்கத் தயா ராக இருக்கிறேன். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி எம்..பி. பேட்டியளித்தார்.